Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி

கீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி

by keelai

கல்வி நகரமாக திகழும் கீழக்கரையில் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்றான கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் இன்று 133 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு AMS ஹமீதுல் ஆஷிக்கின், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர்.

உதவி தலைமையாசிரியை சசிகலா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக், பள்ளியின் முன்னாள் தாளாளர் MMS செய்யது இபுறாகீம், ஹைராத்துல் ஜலாலியா மேநிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஜகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நன்றியுரையை பள்ளியின் உதவி ஆசிரியை அஸ்மத் பானு பேசினார்.

கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர், பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ், ஆசிரிய பெருமக்கள்,  ஜமாஅத் நிர்வாகிகள், கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் விளையாட்டு துறையில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தகவல் : முஹம்மது அஜிஹர் – துணை பொருளாளர், கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாஅத் 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!