Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி பணம் இல்லை என்று கைவிரிப்பு.. பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பு..

கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி பணம் இல்லை என்று கைவிரிப்பு.. பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பு..

by keelai

கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி பணம் இல்லை என்று கைவிரிப்பு..

பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பு.. வங்கி அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் குற்றமா அல்லது மக்களின் குற்றமா??   city-union-bank கீழக்கரையில் சிட்டி யூனியன் வங்கி கடந்த சில வருடங்களாக தன் சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது.  கடந்த இரண்டு வாரங்களாக அரசு புதிய பண மாற்றும் திட்டத்தால் அனைத்து வங்கிகளும் பல சிரமங்களுக்கு இடையில் மக்களுக்கு இயன்ற அளவில் சேவையை அளித்து வந்தார்கள்.  ஆனால் இன்று காலை சிட்டி யூனியன் வங்கி வாசலில் இருந்த பணம் கையிருப்பு இல்லை அதனால் இன்று பணப் பட்டுவாடா கிடையாது என்ற அறிவிப்பு பலகையை கண்டு பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள். இதனால் அன்றாட தேவைக்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் முக்கியமாக பெண்மணிகள், வயோதிகர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.  ரிசர்வ் வங்கியால் அங்கீகாரம் பெற்ற ஒரு வங்கி இவ்வாறு அறிவிப்பு கொடுப்பது இந்திய வங்கி சட்டமைப்புக்கு எதிரானதாகும்.  இந்திய வங்கி முறைபடுத்தும் சட்டமைப்பு 1949 5(B)யின் படி வங்கியானது தனது வாடிக்கையாளரின் பொருளாதாரத்தை அவர் முறையான வடிவில் கேட்கும் பட்சத்தில் திருப்பி பணமாகவோ,  வரவோலையாகவோ வழங்க கடமைப்பட்டதாகும்.  மேலும் வங்கியல் சட்டமைப்பு பிரிவு 24 மற்றும் 56வின் படி மக்களுக்கு தேவையை தீர்க்கும் வகையில் சட்டரீதியான குறைந்த பட்ச தொகையை வங்கியில் கையிருப்பு வைத்திருப்பது அவசியமாகும்.  ஆனால் இன்றைய அறிவிப்பின் படி வங்கயின்p பணிகள் சட்டரீதியான முறையில் கையாளப்படவில்லை என்பது தெளிவாகிறது.  இதன் மூலம் பொதுமக்கள் வங்கியின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது.  மேலும் இது சம்பந்தமாக கீழக்கரை சமூக நல அமைப்புகள் வங்கியின் மேலாளருக்கு முறையான மனுக் கொடுத்து விளக்கம் கேட்பது என்றும் அதற்கு சரியான முறையில் விளக்கம் கிடைக்காத பட்சத்தில் சட்டபூர்வமான நடவடிக்ககைள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!