கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவருக்கு சாதனை விருது..

கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி இயல் துறையில் B.Sc.ITஇரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ஷேக் மொஹம்மது ரஷீத் என்பவர் தன்னுடைய தலையில் மிதிவண்டி சக்கரத்தை சுழலச் செய்து ஒரே நிமிடத்தில் நூறு படிகளை கடந்து தன் சாதனையை முகவை ரெக்கார்ட்ஸ் Mugavai Records மற்றும் Will State Records வில் ஸ்டேட் ரெக்கார்ட்ஸில் வெற்றிகரமாக பதிவு செய்தார். இவர் இராமநாதபுரம் சிக்கல் பகுதியை சேர்ந்த காலம் சென்ற திரு.துல்கருணை – தாஹிரா பானு ஆகியோரின் மகன் ஆவார். ஷேக் மொஹமது ரஷீது தன் சாதனைக்கான அங்கீகாரச் சான்றிதழ் ஆனது.

24 .12. 2018 அன்று கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வில் குழுமங்களின் தலைவர் கலைவாணி மற்றும் முதன்மைச் செயலர் தஹ்மிதா பானு ஆகியோரால் வழங்கப்பட்டது முன்னதாக மாணவர் ஷேக் முகமது ரஷீது தன்னுடைய கல்லூரியில் அமைந்துள்ள மாடிப்படிகளில் சுழலும் மிதிவண்டி சக்கரத்தை தன் தலையில் வைத்து நூறு படிகளை ஒரு நிமிடத்தில் கடந்து சாதனை நிகழ்வை செய்து காட்டினார்.