Home செய்திகள் ஊரடங்கா? அதெல்லாம் எங்களுக்கு இல்லை; பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தொழிலதிபர், உதவிகள் செய்த அதிகாரிகள்…

ஊரடங்கா? அதெல்லாம் எங்களுக்கு இல்லை; பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தொழிலதிபர், உதவிகள் செய்த அதிகாரிகள்…

by Askar

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும் இடத்தினை ஆக்கிரமித்து கொரனா பொறுப்பு அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் சமூக இடைவெளி இல்லாமல் தனிநபர் பிறந்தநாள் கொண்டாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக ஹாட் ஸ்பாட் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது போல் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இராஜபாளையத்தில் தொழிலதிபர் ஒருவரின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தை காவல்துறையினர் ஏற்பாட்டில் பழைய பேருந்து நிலைய காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஆக்கிரமித்து பந்தல் அமைத்து 700க்கும் மேற்பட்ட பொதுமக்களை சமூக இடைவெளி இன்றி அமர வைத்து அரிசி, போன்ற பொருட்கள் வழங்குவதாக கூறி பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி மற்றும் டோக்கான் வழங்காத பொதுமக்களுக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு பெண்கள் மற்றும் ஆண்கள் என கூட்டம் அலை மோதியது.

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து பொதுக் கூட்டங்கள், சுப நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் என அனைத்திற்க்கும் கட்டுபாடு விதித்துள்ளது. அதையும் மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் போன்ற நிகழ்ச்சி என்றால் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளது. ஆனால் ராஜபாளையத்தில் இன்று பழைய பேருந்து நிலையம் முழுவதும் மக்களை கூட்டி வைத்து கொரோனா ஹாட்ஸ்பாட் தடை செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து தனிநபர் பிறந்தநாள் கொண்டாடியது, பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதற்கு இராஜபாளையம் 11ம் அணி சிறப்பு காவல் படை காவலர்கள் வாகனத்தில் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்து இறங்குவது, அவர்களை இந்த பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் அரங்கேறியது. மேலும் காவலர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை. இராஜபாளையம் தெற்கு, வடக்கு காவல் நிலையம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .அரசு விழாக்கள் கூட ஒத்திவைக்கப்பட்டு விழாக்கள் நடைபெறாத நிலையில்

இவர்களுக்கு அனுமதி அளித்தது யார்? காய்கறி மார்க்கெட் மூட அறிவுறுத்தியது யார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கூறும்போது காவல்துறையினர் மத்திய, மாநில அரசு விதிகளுக்கு புறம்பாக தனிநபர் பிறந்தநாள் விழாவிற்கு எந்த ஒரு சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் அதிகமான மக்களை கூட்டியது, மற்றும் காவல்துறை வாகனங்களை தனி நபருக்கு பயன்படுத்தியது எப்படி மேலும் நகரில் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியது எந்த விதத்தில் நியாயமானது என கேள்வி எழுப்பினர். பொதுமக்களை காய்கறி வாங்க விடாமல் அலைக்கழிக்கும் காவல்துறையினர் தனிநபருக்கு எந்த விதத்தில் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை தனிநபரிடம் என்ன ஆதாயம் பெற்றுக் கொண்டு இது மாதிரி செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் பழைய பேருந்து நிலையத்தில் செயல்படக்கூடிய காய்கறி மார்க்கெட் மாற்றுவதற்கு கொரானா கண்காணிப்பு அதிகாரியிடம் மற்றும் நகராட்சி ஆணையரிடமும் எந்த ஒரு அறிவிப்பு வாங்காமல் இந்த செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!