காட்பாடியில் பொது இடத்தில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்.பொது சுகாதாரத்துறை அதிரடி.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரபுப்படி, பொது சுகாதாரபணிகள் துணை இயக்குநர் பானுமதி ஆலோசனையில்காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், விஜடி பல்கலை. எதிரில் மாவட்ட நலக்கல்வியாளர் நீதிபதி ராஜன் தலைமையில் காட்பாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர்கள் பூபதி, ராகவன், சிவக்குமார் கொண்ட குழு கோட்பாரெட் சட்டவிதிப்படி டீ கடைகள், பங்க் கடைகளில் புகைபிடிக்க கூடாது என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினர்.அப்பகுதியில் புகைபிடித்து கொண்டு இருந்த 5 பேருக்கு தலா ரூ 100 அபராதம் விதித்தனர்.கடைகளில் சிகரெட், பீடி விற்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..