
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் பகுதியில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு சுமார் 6 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி பாச்சல் அருகே வந்துக் கொண்டிருந்த போது எதிரே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடிரென லாரி ஒட்டுனர் வண்டியை திருப்பும் போது எதிர்ப்பாராமல் விதமாக லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது விபத்துக்குள்ளான உடன் கடத்தல் அரிசி மாட்டி விடுமோ என்ற அச்சத்தில் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார் அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து பாச்சல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான லாரியை சோதனை செய்ததில் லாரி முழுவதும் சுமார் 6 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் 6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்
பின்னர் இது சம்பந்தமாக தகவல் அறிந்த வட்ட செங்கம் வழங்கல் அலுவலர் லதா மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ரேகாமதி மற்றும் பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஆகியோர் பாச்சல் காவல் நிலையத்திற்கு வந்து பெங்களூருக்கு கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து புதுப்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் கிடங்கிற்கு ரேஷன் அரிசியை அனுப்பி வைத்துள்ளனர் அதன் பிறகு ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய நபர்களை லாரியின் முகவரிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர் பட்டபகலில் ரேசன் அரிசியை கடத்தி சென்ற லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
You must be logged in to post a comment.