
வேலூர் மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் ் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, மாநில விவசாய அணிசெயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலாளர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புவரவேற்றார்.வேட்பாளர்களை அறிமுகபடுத்தி பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்பட்டு வந்தன. உள்ளாட்சி தேர்தலில் நரம் கட்டாயம் வெற்றிபெறுவோம். திமுக தில்லுமுல்லுக்கு பெயர் பெற்றது.அவர்கள் எதையும் சொல்வார்கள் செய்யமாட்டார்கள்.திமுகவின் சலசலப்புக்கு அஞ்சவேண்டாம். தைரியமாக தேர்தல் களத்தில் பணியாற்றுஙகள் என்று பேசினார்..கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ், வள்ளிமலை சின்னதுரை, பகுதி செயலாளர் நாராயணன், வேலூர் மாநகராட்சி சுகாதார குழு முன்னாள் தலைவர் காங்கேயநெல்லூர் ரமேஷ், சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.