Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஊரடங்கு சமயத்தில் வெளியில் சுற்றிய 1000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்..

ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஊரடங்கு சமயத்தில் வெளியில் சுற்றிய 1000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றிய 720 நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தும் 485 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா உட்பட தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வெளியில் பொதுமக்கள் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழக அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பகல் மற்றும் இரவு நேரத்தில் சுற்றி திரிந்ததில் இதுவரை 720 நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 485 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் 5 ஆட்டோக்கள், 4 சொகுசு கார்களையும் சிறைபிடித்து வைத்துள்ளனர்.அத்தியவாசிய தேவைக்கு வெளியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் முககவசம், தலைகவசம் அணிந்து வர வலியுறுத்தியும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை எச்சரித்தும் வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!