Home செய்திகள் எழுமலையில் கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

எழுமலையில் கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் வசித்து வருபவர் சுரேஷ் (45). இவருக்கு புள்ளுக்கடை மைதானம் அருகில் சுமார் 55 அடி நீளம், 25அடி அகலமும் கொண்ட கிணறு (15அடி தண்ணீர் உள்ள கிணறு) உள்ளது. இந்த கிணற்றில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்த 2வயது மதிக்கதக்க பெண் புள்ளிமான் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த புள்ளிமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் கீழே இறங்கி சுமார் 1மணி நேரம் போராடி புள்ளிமானை பத்திரமாக உயிருடன் மீட்டனர். அதனைதொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட புள்ளிமானை வனத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்

உசிலைசிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!