Home செய்திகள் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..

மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..

by Abubakker Sithik

இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்..

இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் (தேர்தல் அதிகாரி) எஸ். ராஜலிங்கம். திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவரது தந்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளாராக பணியாற்றியவர். தாய் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு மற்றொரு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்-ஆக வெற்றி பெற்று உத்தர பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேச மக்களிடையே திறமையான அதிகாரியாக பேசப்பட்டு வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம், வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான தென்காசி ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இந்திய பிரதமர் மோடி மற்றும் தேர்தல் அதிகாரி தென்காசி ராஜலிங்கம் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை தென்காசி மாவட்ட வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com