Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..

by Abubakker Sithik

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், ஸ்ரீகோமதியம்பாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் சென்னை உத்தரவுக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், DON BOSCO TEAM. Mass Movement for Transformation (MMT) and Nuture Bhel) என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல்வழிகாட்டுதலுடன் தொழில் சார்ந்த படிப்பும் (professional course) மற்றும் காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com