Home செய்திகள் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சியில் வீடு வீடாகச் கொரானா பரிசோதனை

நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சியில் வீடு வீடாகச் கொரானா பரிசோதனை

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முசுவனூத்து ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள் இப்பகுதிகளில் உள்ள விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். கிராம மக்களில் அங்காங்கே கொரானா தொற்று ஏற்பட்டு சிலர் உயிரிழந்ததாக பரவலாகப் பேசப்படுகிறது. எனவே கிராமங்கள்தோறும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி முசுவனூத்து ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் அம்மையநாயக்கனூர் வட்டார அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர்கள் ஆலோசனையின்படி வீடு வீடாகச் சென்று கொரானா கொடிய தொற்று நோய் பரிசோதனை முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் முக கவசம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவமனை டாக்டர் வினோத் தலைமையில் மருத்துவ குழுவினரும், மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களும் ஈடுபட்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முகமது அத்திப் நன்றி கூறினார். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com