மதுரை கள்ளழகர் கோவில் மலைப்பாதை திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி..
மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கள்ளழகர் திருக்கோவில். மலைமீது முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் மலைப்பாதையில் பாலம் வேலை நடைபெறுவதால் இன்று ஒரு நாள் பக்தர்கள் மலை மீது வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஒரு சிலர் மலை மீது சிரமத்துடன் நடந்தே பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பால் மலைமீது ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் மலை மீதுள்ள முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் மலை மீது உள்ள சுவாமிகளை தரிசனம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அடிவாரத்தில் காத்திருக்கும் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.