Home செய்திகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றை காரணம் காட்டி கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்திற்காக அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றை காரணம் காட்டி கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்திற்காக அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

by mohan

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் செயல்படாத நிலையில் அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளாகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கே முக்கியத்துவம் அளித்து வருவதால் சாதாரண வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனர்.இதே கர்ப்பிணிப் பெண்களின் விஷயத்திலும் அலட்சியம் காட்டுவதால் முறையான சிகிச்சையின்றி கர்ப்பிணிகள் இறக்கக் கூடிய சூந்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்… குறிப்பாக வாகன போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத கிராமப்புற பகுதிகளில் உள்ள அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர்.மேலும் ஊரடங்கினால் இவர்களுக்கான மாதந்திர பரிசோதனையான ஸ்கேன் இரத்தப்பரிசோதனை எக்ஸ்ரே போன்றவை செய்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது. அனைத்து தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் பலருக்கு டெலிவரி தேதி சரியாக தெரிய வாய்ப்பில்லை.

குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மருத்துவமணைகளில் உள்ள செவிலியர்கள் கொரோனா தொற்றை காரணம் காட்டி உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கின்றனர்.ஆனால் இங்குள்ள சுகாதார பணியாளர்கள் அதிகாரிகள் கொரோனா நோய் பரவாமல் தடுப்பது குறித்த பணியில் உள்ளதாலும் தொடர்ந்து வேலை செய்து வருவதாலும் அவர்களும் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை.பெரும்பாலும் கொரோனா தொற்றை காரணம் காட்டி மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை எனக்கூறப்படுகிறது.ஏதேனும் காரணத்தைக் கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்.பிரசவ வலியுடன் வருபவர்களை உடனே அழைத்துச் செல்ல 108 ஆம்புலனஸ் உடனே வருவததில்லை.அவர்களும் கொரோனோ தடுப்புப் பணியில் உள்ளதாக கூறி தாமதிப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடிவதில்லை.இதனால் தாய் சிசு உயிரிழக்கக் கூடிய அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

உசிலம்பட்டிப் பகுதிகளில் கடந்த வாரத்தில் மட்டும் செட்டியபட்டி பொட்டுலுப்பட்டி மற்றும் எழுமலைப் பகுதிகளிலிருந்து வந்த கர்ப்பிணிப் பெண்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்காததால் காலதாமத்துடன் மதுரை மதுரை மருத்துவமணை கொண்டு செல்லப்பட்டு அங்கும் தாமதிக்கப்பட்டதால் சிசு வயிற்றிலேயே இறந்த கொடுமை அரங்கேறியுள்ளது. எனவே அரசு கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள அவர்கள் பயணம் செய்வதற்கு ஏதாவது வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆா்வலா் சௌந்திரபாண்டியன் கூறுகையில் அரசு கா்ப்பிணிப் பெண்கள் விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்விஷயத்தில் மருத்துவ மனை ஊழியா்களை குற்றம் சொல்ல விரும்பவில்லை.தற்போதைய நிலையில் அவா்கள் களப்பணியாற்ற வருவதே பொிய விஷயம்.அரசு சம்மதித்தால் தன்னாா்வ இளைஞா்களாகிய நாங்கள் அவா்களுடன் கா்ப்பிணிப் பெண்கள் விஷயத்தில் தனிக்கவனம் எடுத்து களப்பணியாற்ற தயாராக உள்ளோம் எனக் கூறினாா்.

இருக்கும் உயிர்களை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசு கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி வருங்கால இளந்தளிர்களை கருவிலேயே கொல்லும் அவல நிலையை மாற்ற வேண்டுமென்பதே விருப்பமாகும்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!