மதுரை மார்க்கம் ரயில் சேவையில் மாற்றம்…

மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை ஒன்றில் இருப்பு பாதை தரை தளம் மேம்படுத்தும் பணிகள் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் 13.12.2018 மற்றும் 14.12.2018 தேதிகளில் கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 2. வண்டி எண் 56710 மதுரை – பழனி பயணிகள் ரயில் 14.12.2018 மற்றும் 15.12.2018 தேதிகளில் மதுரை மற்றும் கூடல்நகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 3. வண்டி எண் 56705 விழுப்புரம் – மதுரை பயணிகள் ரயில் 13.12.2018 மற்றும் 14.12.2018 தேதிகளில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 4. வண்டி எண் 56706 மதுரை – விழுப்புரம் பயணிகள் ரயில் 14.12.2018 மற்றும் 15.12.2018 தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 5. வண்டி எண் 56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 14.12.2018 அன்று விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 6. வண்டி எண் 56735 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 14.12.2018 அன்று மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..