Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உள்ளாட்சி தேர்தல்… கீழக்கரைக்கு பொது வேட்பாளரா??… பல முனை போட்டியா??..

உள்ளாட்சி தேர்தல்… கீழக்கரைக்கு பொது வேட்பாளரா??… பல முனை போட்டியா??..

by ஆசிரியர்

கீழக்கரையில் சில வாரங்களுக்கு முன்பு தனியார் அறக்கட்டளை மூலம் அனைத்து ஊர் ஜமாத் நிர்வாகிகள், சங்கங்கள், அமைப்புகள் என கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, இது சம்பந்தமான முடிவுகள் அனைத்தும் கீழக்கரை ஜமாத் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின் பேரில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (15/11/2019) காலை ஊரில் விநியோகம் செய்யப்பட்ட நாளிதழ்களுடன் மற்றும் சில தொழுகை பள்ளிகளில்  “யூனைடெட் கீழக்கரை கமிட்டி” என்ற பெயரில் பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழக்கரை தெற்குதெரு ஜமாத் நிர்வாகிகளில் ஒருவரான நிஸ்பர் கூறிகையில், “கீழக்கரையில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர வேண்டி தனியார் டிரஸ்ட்  சார்பாக கீழக்கரையில்ள் அனைத்து ஜமாத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டது. அதே போல் எடுக்கப்படும் எல்லா முடிவுகளுமே அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் அனுமதி பெறப்படும் என முன்மொழிந்து கூட்டத்தை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் எங்கள் ஜமாத் உட்பட பல அமைப்புகளின் சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலே நிறைவுபெற்றது.

அதன்பின் ஒவ்வொரு ஜமாத்திலிருந்தும் 3நபர்களை ஒருகுழுவாக நியமித்து அவர்களின் பெயரும் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் ஜமாத்தார்கள் மற்றும் ஜமாத்துக்குட்பட்ட 3சங்கங்களை அழைத்து பேசப்பட்டதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் யூனைடெட் கீழக்கரை கமிட்டி என்றொரு புதிய பெயரில் பிரசுரம் விநியோகம் செய்வது ஆச்சரியமாகவும், எங்கள் ஜமாத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவு படுத்த கடமைபட்டுள்ளோம்.  மேலும் உள்ளாட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு  அழைப்பு விடுத்தவர்களிடம் எங்களது ஜமாத்தின் நிலைபாடு பற்றி எழுத்து மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும் ” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!