Home செய்திகள் செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 464 மாணவர்களுக்கு பணி நியமனம் – விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்..!

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 464 மாணவர்களுக்கு பணி நியமனம் – விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்..!

by Askar

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 464 மாணவர்களுக்கு பணி நியமனம் – விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்..!

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது விழாவுக்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கிடாஜலபதி தலைமை தாங்கினார் செல்வ நாராயண ரெட்டியார் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் அம்பிகாபதி திகபவதி ரவிக்குமார் ரேவதி சுந்தரமூர்த்தி ஐஸ்வர்யாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பிரமிளா ஜெயந்தி வரவேற்றுப்பேசினார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 464 மாணவர்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து பணி நியமன ஆணைகள் மாநில அளவில் தறப்பட்டியலில் மதிப்பெண்பெற்ற 24 மாணவர்கு ரூபாய் ஒரு லட்சத்து 37ஆயிரம் ரொக்கப்பரிசுகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கு கோப்பைகள் வழங்கிபேசினார். அப்போது பாலிடெக்னிக் கல்லூரியில் 100 சதவிகித வேலைவாய்பு தருவது மகிழ்ச்சியானது அதிகப்பட்சம் ரூ.24ஆயிரம் வரை சம்பளதவணைகள் வழங்கப்படுவதை மாணவர்கள் உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் 1500 மாணவர் படிக்கும் இடத்தில் 300 பேருக்கு கேம்பஸ் இன்டர்வியு எனகூறி வேலைதருவார்கள் இங்கு நுறு சதவிகிதம் பணி நியமனம் வழங்குவது சிறப்பானது கல்லூரி காலம் பசுமையான காலம் இதுவரை அப்பா அம்மா செலவில் கல்லூரி உள்ளிட்ட சிறப்பான சலுகையில் வாழ்ந்தீர்கள் இனி நாங்கள் உங்கள் குடும்பம் சமுதாயம் உயரபாடுபடவேண்டும் ஏற்றஇறக்கம் இடர்பாடுகள் அவமானம் துன்பம் இனி வரும் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்த வயதிலேயே குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் தண்ணீரில் மூழ்குபபனுக்கு அதிலிருந்து தப்பிப்பது மட்டுமே வழி குறிக்கோள் அதுபோல் குறிக்கோளை தேர்வு செய்து கொள்ள வேண்டும் தென் ஆப்ரிக்காவில் ஓடும் ரயிலில் காந்திபட்ட அவமானம் அவரை தேசத்தந்தை ஆக்கியது தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டும். போதை பழக்கமும் குற்ற வழக்குளில் தவறுசெய்து மாட்டிக்கொள்வதும் கூடாது. சாலை பயனங்களில் நிதானம் தலைக்கவசம் சீட்பெல்ட் அணிதல் அவசியம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் புத்தகம் படித்தல் அறிவு வளர்ச்சிதரும் பயம் மனஅழுத்தம் போக்கும் கடினமுயற்சி விடாமுயற்சி உழைப்பு அவசியம் இவ்வாறு விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் பேசினார் சூரிய மித்ரா திட்ட இலவச பயிற்சி பெற்ற 90 மாணவர்களுக்கு திருப்பத்தூர் அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் சந்திரசேகரன் மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கிப்பேசினார். நிகழ்ச்சியை ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் தொகுதது வழங்கினார் முடிவில் ஆங்கில விரிவுரையாளர் அலெக்ஸான்டர் நன்றி கூறினார். விழாவில் அறிவுத்திருக்கோயில் திருவண்ணாமலை முரளி கடலுர் கிருஷ்ணகுமார் திருவண்ணாமலை மகாதீபம் குணசீலன் மின்வாரியம் அசோக்குமார் ஊசாம்பாடி சிவராமன் புதுப்பாளையம் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் முன்னதாக தண்டராம்பட்டு பாரத்வித்யாமந்தீர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராமு மாணவர்களுக்கு தனிமனித மேம்பாடு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!