தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சீர்கேடு சம்பந்தமான பேச்சு வார்த்தை – வீடியோ பதிவு

இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மிகமோசமான நிலையில் இருப்பதால் அதை விட்டு விட்டு மாணவ – மாணவிகள் நலன் கருதி புதிய வகுப்பறைகள் கட்டி தர தமிழக அரசை வலியுறுத்தி சீர் செய்ய கோரி பல கோரிக்கைகள் வைத்தும் எந்த  தீர்வும் கிடைக்கவில்லை.

தீர்வு  கிடைக்காத நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி, தினைக்குளம் ஜமாத் தினர் மற்றும் இன்னும் பல அமைப்புகள் இணைந்து உண்ணா நோன்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அமைப்பினர் மற்றும் ஜமாத்தினர் முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெறுவதாக இருந்த உண்ணா நோன்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.