இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி; நெல்லை பேராயர் பங்கேற்பு..

இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி; நெல்லை பேராயர் பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். மாணவ ஆசிரியர் ஆயிஷா நமீரா வரவேற்று பேசினார். மாணவ ஆசிரியர் ஜெஸ்லின் அமிர்தா வேதபகுதி வாசித்தார். நெல்லை திருமண்டல பேராயர் அம்மா ஜாய் பர்னபாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜார்க்கண்ட் சகோதரி பிரின்ஸஸ் நகோமி ஆசிரியர் மாணவிகளுக்கு தனித்திறன் மேம்பாட்டு குறித்து விளக்கினார். பேராசிரியர்கள் முத்துலட்சுமி, ஜெனிபர், ஹெப்சி, நூலகர் டாக்டர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக், அலுவலக பணியாளர் பிரெட்ரிக் மற்றும் பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ருக்கையா ரூகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மன்சூரா பர்வின் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்