தேவதானப்பட்டி யில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறைகூவல் விடுக்கப்பட்டு இருந்தது ,அதன் ஒரு பகுதியாக தேவதானப்பட்டியில் நகரில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இதில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே. இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை உடனடியாக கைவிடு சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை EIA 2020நிறைவேற்றாதே . 100 நாள் வேலை திட்டத்தை நகர் புறங்களுக்கும் வழங்கிடு பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே,குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 6மாத காலத்திற்கு உணவுப்பொருள் அனைத்தையும் இலவசமாக வழங்கிட,நலவாரியத்தில் பதிந்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் 7500 வீதம் 6மாத காலம் வழங்கிட வலியுறுத்தி , தொழில் துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்திற்கு பிரேம்குமார்,(cpm)தாலுகா குழு உறுப்பினர், இலியாஸ் CITU மத்திய சங்க செயலாளர் தலைமை தாங்கினார். இதில் CITU, LPF, AICCTU , STDU , விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாய சங்கத்தை சார்ந்த 28 நபர்கள் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர்.தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..