Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அலட்சியத்தில் அறநிலையத்துறை……ஆவேசத்தில் பொது மக்கள்…

அலட்சியத்தில் அறநிலையத்துறை……ஆவேசத்தில் பொது மக்கள்…

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா எட்டாம் நாள் திருவிழா இக்கோவிலில் இருந்து சுமார் 60ஆண்டுகளுக்கு பின் கடந்த 2014ம் ஆண்டு முதல் சுவாமி குதிரை வாகனத்தில் வீதி புறப்பாடாகி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரத்தில் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையிலும் கட்டளைதார் மற்றும் உபயதாரர்கள் முன்னிலையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த வருடம் 28.03.2019 எட்டாம் நாள் திருவிழாவில் ஆணையப்பபிள்ளை சத்திரத்திற்கு சுவாமி புறப்பாடு கட்டளை மற்றும் சீர்பாத கட்டணத்தை புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரத்தின் பொறுப்பு அலுவலரான திருநெல்வேலி உதவி ஆணையர் செலுத்த மறுத்ததால் சத்திரத்திற்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு இல்லை என கோவில் நிர்வாக அலுவலர் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள், புறையூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரே நாளில் நன்கொடை வசூலிக்கப்பட்டு கட்டளை&சீர்பாத கட்டணத்தை செலுத்தியபின் குதிரை வாகனத்தில் நிகிரில் முகில் வண்ணன் சுவாமியை ஆணையப்பபிள்ளை சத்திரத்தில் எழுந்தருளச்செய்து தீபாராதனை முடிந்து சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.இந்நிகழ்வில் ஆணையப்பபிள்ளை வாரிசுதாரர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆணையப்பபிள்ளை சத்திரத்திற்கு பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும் அதிலிருந்து வரக்கூடிய குத்தகைத்தொகையை வைத்தே பல திருவிழாக்கள் நடத்த முடியும் என்றும்,இந்து சமய அறநிலையத்துறையினர் அலட்சியத்தில் உள்ளதாகவும்,உபயதாரர்களிடம் இருந்து பணம் பெற்று அனைத்து திருவிழாக்களும் நடத்தப்படுகின்றனர் எனவும் இனிவரும் காலங்களில் குத்தகைத்தொகையை வசூல் செய்து முறைப்படி கட்டளைதாரர் வசம் ஒப்படைத்து சுவாமியை எழுந்தருளச்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்..

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!