Home செய்திகள்கீழக்கரை செய்திகள் செயினை பறிக்க முயற்சி செய்த வாலிபரை விரட்டி பிடித்த காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு ..

செயினை பறிக்க முயற்சி செய்த வாலிபரை விரட்டி பிடித்த காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு ..

by ஆசிரியர்

இன்று 29.03.2019 மதுரை மாவட்டம் திருமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த திருமதி.லட்சுமி 50/19, என்பவர் தனது கணவர் கண்ணனுடன் காலை பாண்டிகோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் மதுரை மேயர் முத்து பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது தனக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவருடைய கழுத்தில் இருந்த 11 ½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.

உடனே அவர் சத்தம் போட்டுள்ளார், அச்சமயம்   பணி முடிந்து அவ்வழியாக வீட்டிற்கு சென்ற மதுரை மாநகர் ஆயுதப்படையைச் சேர்ந்த முதல் நிலை காவலர் (2398) மகாபாண்டியன் என்பவர் அந்த நபரை துரத்தி பிடித்து C1 திடீர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து  வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்திலகம்  புலன்விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை விளாச்சேரி, கபாலிபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மாரிமுத்து 29/19 என்பது தெரியவந்தது.  எனவே அவரை காவல் ஆய்வாளர் கைது செய்து அவரிடமிருந்து TN59 AW 5865 TVS SPORTS இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அந்த வீர செயலில்  ஈடுபட்ட  காவலர் திரு. மகாபாண்டியன் என்பவரை பாராட்டினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!