Home செய்திகள்கீழக்கரை செய்திகள் எடப்பாடிக்கு தான் காவலாளி மோடி…நாட்டுக்கு அல்ல… ஸ்டாலின் இராமநாதபுரம் பிரச்சார கூட்டத்தில் பேச்சு..

எடப்பாடிக்கு தான் காவலாளி மோடி…நாட்டுக்கு அல்ல… ஸ்டாலின் இராமநாதபுரம் பிரச்சார கூட்டத்தில் பேச்சு..

by ஆசிரியர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் திமுக., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: “பாசிச ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்ற மோடி தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்த நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுகொள்ள நான் வந்துள்ளேன்.

கலைஞர் இல்லாமல் நடைபெறும் இந்த தேர்தல் திமுக தலைவராக அவருடைய மகனான ஸ்டாலின் உங்களிடம் ஆதரவு கேட்க வந்துள்ளேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்  நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தேர்தல் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சி நடைபெறுவது போன்றும் எங்களை அவர்கள் விமர் சிக்கின்றனர். பிரதமர் மோடி நாட்டுக்கு காவலாளி அல்ல. கொடநாடு கொலை விவகார கொலைகார எடப்பாடி பழனிசாமிக்கு காவலாளியாக உள்ளார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய முன் வராத மோடி, கேட்காமலேயே கார்பரேட் கடன்களை செய்தவர் மோடி. மத்தியில் சர்வாதிகார மோடி ஆட்சி. மாநிலத்தில் உதவாக்கரை எடப்பாடி ஆட்சி. ஏழைகளுக்கு உதவும் ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது. தாது மணல், ஆற்று மணல், நெடுஞ்சாலை, முட்டை உள்ளிட்டவைகளில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.70 லட்சம் கோடி கொள்ளை. இவற்றில் பறிமுதல் செய்தது போக ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கொள்ளை அடித்துள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு, இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டம் அனைத்து மதத்தினரும் ஒன்றாக வாழ பெரியார் சமத்துவபுரம் உட்பட பல திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 617 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தது திமுக ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகியவர் ஜெயலலிதா. கொடநாடு விவகாரம் தொடர்பாக எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது. கொடநாடு விவகாரம் தொடர்பாக தீர்ப்பு எதுவானாலும் எனக்கு கவலையில்லை. அது தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. எங்கு சென்றாலும் கொடநாடு கொலை தொடர்பாக நான் பேசுவேன். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தற்கொலை, கம்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை, சயோனின் மனைவி, மகள்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் கொலைக்கு உடைந்தையான எடப்பாடி முதல்வராக இருக்கலாமா?.

அதிமுக ஆட்சியை 2 வருடமாக காப்பாற்றி கொண்டிருக்க கூடியவர் மோடி என அண்மையில் தமிழக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தது குறித்து மணிகண்டனை விட வேறு யாரும் ஒப்புகொள்ளமுடியாது. தமிழக மீனவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், இன்றளவும் பல மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை, 50ஆயிரம் அபராதம், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என இலங்கை அரசு 2017ம் ஆண்டு மோசமான சட்டம் கொண்டு வந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நினைத்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என எடப்பாடி வாய் கூசாமல் சொல்கிறார்., இந்த பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் தலைமையில் தான் கடந்த 7 ஆண்டுளாக பொள்ளாச்சியில் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. போலீஸ் உடையை பயன்படுத்தி கொள்ளையடிக்க கூடிய ஆட்சியை தான் எடப்பாடி சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தெரிவிக்கிறார். திருடர்கள் போலீஸ் மாதிரி வருகின்ற ஆட்சி தான் எடப்பாடி ஆட்சி. விவசாய கடன்களை மோடி அரசால் தள்ளுபடி செய்ய முடியுமா? – மோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டார் கார்ப்பரேட் கம்பெனியால் வாங்கப்பட்ட கடன்களை தான் தள்ளுபடி செய்ய முடியும். மோடியை பார்த்து நான் இந்திய மக்கள் சார்பில் சில கேள்விகள் கேட்கிறேன்: 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தினீர்களா? வெளிநாட்டில் இருக்க கூடிய கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15லட்சம் தருவீர்கள் என்று சொன்னீர்கள் செய்தீர்களா? வெறும் 15 ரூபாயாவது வழங்கினீர்களா?, மோடியின் பதிலை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் மோடியால் விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் கிடைக்காது படத்தில் வருவது போன்று சொன்னால் பணம் வரும் ஆனால் வராது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின் உற்பத்தி அமைக்கப்படும், இலங்கை கடற்படை பிரச்சனைகளை தடுக்கப்படும், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க இரு கடற்பகுதியிலும் இருநாட்டு கடற்படையின் நெருக்கடி மையம் அமைக்கபடும், கச்சத்தீவை மீட்கப்படும், மீனவர்களுக்கு தனி அமைச்சரவை அமைக்கப்படும், மீனவர்களுக்கு மானிய விலையில் கருவிகள் வழங்கப்படும், மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும் என அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், தேர்தல் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ரகுபதி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் பேராசிரியரும், முன்னாள் எம்எல்ஏ., ஜவாஹிருல்லா, திமுக., தீர்மானக் குழு துணை செயலரும் முன்னாள் அமைச்சருமான சத்திய மூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ.,கள் திசை வீரன், முருகவேல், சுப.த.சம்பத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலர் அபுபக்கர் எம்எல்ஏ., இராமநாதபுரம் லோக் சபா தொகுதி இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி திமுக., வேட்பாளர் சம்பத் குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மதிமுக நிர்வாகி குணா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் காசிநாத துரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் முருகபூபதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வேந்தை சிவா, சகுபர் சாதிக், ஆல்பர்ட் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மண்டபம் ஜெயினுலாபுதீன், முன்னாள் எம்எல்ஏ., கதிரவன், மற்றும் முருகவேல் ராஜன், அமாவாசி உள்ளிட்ட திமுக., காங்., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!