தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தொழில்நுட்ப பயிலரங்கம்..

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றமும், கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் கிராமப்புற மக்களுக்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பயிலரங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 23 மற்றும் 25 முதல் 28 வரை நடைபெற்றது.

இதில் 23ம் தேதி உணவுப் பொருட்களின் மதிப்பு கூட்டு ( பனை சர்க்கரை மற்றும் பனங்கற்கண்டு) உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உணவுப் பொருள் தயாரிப்பு முறையை கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா மற்றும் திருமதி சம்யுக்தா தேவி அவர்களால் தாசிம் பீவி கல்லூரி வளாகத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

25ம் தேதி வண்ணமீன்கள் வளர்ப்பு முறையை முனைவர் அப்துல் நாசர், மூத்த விஞ்ஞானி முனைவர் ஜெயக்குமார், முனைவர் ஜான்சன் ஆகியோரால் CMRI மண்டபம் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.

26ம் தேதி கடற்பாசி உற்பத்தி முறையை முனைவர் . ஈஸ்வரன் மூத்த விஞ்ஞானி. முனைவர். கணேசன் ஆகியோர் CSMCRI-MARS மண்டபம் முகாமில் உள்ள மையத்தில் பயிற்சி அளித்தனர்.

27ம் தேதி கரிம வேளாண்மை செய்முறையை முருகேசன் அவர்கள் DARE நிறுவனம் எட்டிவயலில் உள்ள காய்கறி வளர்ப்பு பண்ணையில் பயிற்சி அளித்தார். 28ம் தேதி காளான் சாகுபடி செய்முறையை அருள் தாமஸ் SKT Agro Foods Pvt. Ltd.,சார்பில் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளித்தார். அனைத்து பயிற்சிகளும் இனிதே நிறைவுற்றது.

இதில் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், வேலை வாய்ப்பற்றோர் ஆகியோர்கள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

​​​​​ ​ ​​​​