Home செய்திகள் TARATDAC- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்று சாய்வுதளம் அமைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நன்றிகள்..

TARATDAC- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்று சாய்வுதளம் அமைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நன்றிகள்..

by mohan

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள மிடாப்பாடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் பல்வேறு நோய்களை தீர்த்துக்கொள்ள வருகை தருகிறார்கள். இவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரும் அடக்கம். இவ்வாறு வருகை தரும் பொதுமக்கள் மருத்துவரை சந்திக்கவும், மருந்து மாத்திரை பெறவும் சாய்வுதளம் இல்லாமல் படிக்கட்டுகள் மட்டுமே இருந்த காரணத்தால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12.08.19 அன்று TARATDAC சங்கத்தின் சார்பில் சாய்வுதளம் இல்லாதது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், பத்திரிகை உள்ளிட்ட ஊடங்கங்களுக்கும் செய்தி வெளியிட்டோம். அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் மிடாப்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் அனைத்திலும் சாய்வுதளம் அமைத்து கொடுத்துள்ளார்கள்.TARATDAC சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு சார்பில் N. பகவதி ராஜ் – ஒன்றிய தலைவர்K. காளீஸ்வரி – ஒன்றிய செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!