Home செய்திகள் மண்டபத்தில் மத்திய அரசு திட்ட விழிப்புணர்வு முகாம்

மண்டபத்தில் மத்திய அரசு திட்ட விழிப்புணர்வு முகாம்

by mohan

இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், ராமநாதபுரம் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலகம், இந்திய அஞ்சல் துறை, மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் ஆகியன சார்பில் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு மண்டபம் மருத்துவ அலுவலர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் உதயகுமார், அஞ்சலக பண பரிமாற்ற சேவை குளித்து முதுநிலை மேலாளர் ம.முருகேசன்,ராமநாதபுரம் கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ் பேசினார்.தனிநபர் கழிப்பறை, தூய்மை பாரத இயக்கம், பெண் கல்வி காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம், செல்வமகள் சேமிப்பு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம், ஏடிஎஸ் கொசு பாதிப்பு, ரத்த சோகை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் பெண் கல்வி பாதுகாப்பு , தனி நபர் கழிப்பறை, பிளாஸ்டிக் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.கை கழுவும் முறை குறித்து மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர். முகாமில் பங்கேற்றோருக்கு துணிப்பை வழங்கப்பட்டது. ஏடிஎஸ் கொசுப்புழு உற்பத்தி குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சு.முனியசாமி நன்றி கூறினார். மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் சு.மெய் மொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மண்டபம் வட்டார மேற்பார்வையாளர் நாகேஸ்வரி, போஷான் அபியான் தொழில்நுட்ப மண்டபம் வட்டார ஒருங்கிணைப்பாளர் கோப்பெருந்தேவி, மண்டபம் சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், மண்டபம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள் ஜூலியட் (அறிவியல்) , ஆரிபா (சமூக அறிவியல்) வேலம்மாள் (சமூக அறிவியல்), துப்புரவு பணி மேற்பார்வையாளர் (பொ) ஜாஹீர் உசேன்சுகாதார பரப்புரையாளர்கள் கார்த்திகா, கோகிலா, சித்ரா,அங்கன்வாடி, டெங்கு தடுப்பு, துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!