Home செய்திகள் ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் !

ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 19ல் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் அனைத்து மாநிலங்களிலிருந்து மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருவது தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சந்தனக்கூடு திருவிழா சமயத்தில் ரதம் ஊர்வலமாக வரும் பொழுது காவல்துறையினரும் அதனோடு சேர்ந்து வர வேண்டும் என்றும் , வருகின்ற யாத்திரிகளுக்கு கூடுதலாக கழிப்பறை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் , ஏர்வாடியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்றும் , ரதம் இருக்கும் இடத்தை சுற்றி துப்புரவு செய்து ரதம் செல்வதற்கு ஏதுவாக சரி செய்ய வேண்டும் என்றும் , அதிகமான யாத்திரைகள் வருவதால் துப்புரவு பணியாளர்களை அதிக படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் ,வருகின்ற யாத்திரிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்ய வேண்டும் என்றும் கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களை சரி செய்ய வேண்டும் என்றும் , கூடுதலான போக்குவரத்துகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் , அன்னதானம் வழங்குபவர்களிடம் உணவு தரமாக செய்ய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் , தர்காவில் தங்குபவர்களிடம் முறையான ஆவணங்கள் பெற வேண்டும் என்றும் , திருவிழா காலங்களில் போடப்படும் ராட்டினங்களை அரசு அனுமதியோடு முறையாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் சான்றிதழ் பெறாத ராட்டினங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் , சுகாதார சார்பாக கூடுதலான மருத்துவர்கள் செவிலியர்கள் முறையான மருந்துகள் வைத்திருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு அதிகாரிகள் முறையாக செயல்பட வேண்டும் என்கின்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தர்கா கமிட்டி நிர்வாகிகள் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஊராட்சி அதிகாரிகள் போலிஸ் அதிகாரிகள் உட்பட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com