இராமநாதபுரம் நகர், நியாய விலை கடை 6-யில் இன்று (10.01.2024) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களாக ரூ.1000/- ம், வேட்டி சேலை, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு கொண்ட தொகுப்பு பொருள்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்ததையொட்டி அதே நாளில் அனைத்து பகுதிகளிலும் பயனாளிகளுக்கு இத்திட்டத்தை வழங்க உத்தரவிட்டதற்கிணங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 3,57,522- க்கும், ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டைகள் 39,713-க்கும், ஓ.ஏ.பி குடும்ப அட்டைகள் 1,177-க்கும், ஏ.என்.பி குடும்ப அட்டைகள் 62-க்கும், காவலர் குடும்ப அட்டைகள் 1235-க்கும், இலங்கை தமிழர்களுக்கான குடும்ப அட்டைகள் 456-க்கும் என ஆக மொத்தம் 4,00,165 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரொக்கம் ரூ. 1000/-ம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, வேட்டி, சேலை இவற்றுடன் முழு கரும்பும் கொண்ட பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாவட்டத்தில் உள்ள 783 நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகிறது. தற்பொழுது வசந்தம் நகர் பகுதியில் உள்ள 819 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மனோகரன், இராமநாதபுரம் (குடிமைப்பொருள் வழங்கல்) தனி தாசில்தார் கே எம் தமிம்ராஜா இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே. கார்மேகம் துணைப்பதிவாளர் கோவிந்தராஜன் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன் , பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சங்க பதிவாளர்கள் மீனாட்சி சுந்தரம் பாபு , இராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் , நகர் மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின், வீரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
69
You must be logged in to post a comment.