சுரண்டை காமராஜர் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்; சீருடைகள் வழங்கல்

சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கல்..

சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 சார்பில் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு சேமிப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் செல்வி, பேராசிரியர்கள் ஸ்டீபன் டேவிஸ், பிரான்சிஸ் ஆபிரகாம், சித்திரக் கனி, அண்ணாமலை, ஹரிஹரசுதன், அமிர்தராஜ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சீனியர் மேலாளர் மகாராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து அதே கல்லூரியில் படித்த மாணவியும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவியுமான அனுஷா கண்ணன் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து சுரண்டை காமராஜர் அறக்கட்டளை கௌரவ தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் சார்பில் சுரண்டை காமராஜர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ.கே.எஸ். ஜெயக்குமார், ஆர்.வி. ராமர், கே.டி. பாலன், ப. ரவிக்குமார் ஆகியோர் நாட்டு நலப் பணி திட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்