தென்காசி தலைமை மருத்துவ மனையில் குடற்புழு நீக்கத்திற்கு மாத்திரைகள் வழங்கும் முகாம்..

தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடந்தது. இம்முகாமினை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தொடங்கி வைத்து குடல் புழுக்களின் தாக்கம் பற்றியும் அதன் பின்விளைவு பற்றியும் எடுத்துக் கூறி குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் விளக்கி கூறினார். தென்காசி மருத்துவமனை குழந்தைகள் பிரிவின் தலைவர் மருத்துவர். கீதா குடல் புழுக்களின் பாதிப்பு மற்றும் அதனை நீக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்வில், 19 வயதிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகள் ஆர்வமுடன் குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்றுச் சென்றனர். தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுடன் சேர்ந்து குடற்புழு நீக்க உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மூத்த மருத்துவர் எஸ்.எஸ் ராஜேஷ்,மகேஷ், அன்ன பேபி, முஸம்மில் செவிலியர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்