ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மணி பாரதி கருணாகரன் கலந்து கொண்டு கூறுகையில் . இன்றைய காலகட்டத்தில் மொபைல் மூலம் பல பிரச்சனைகளை இளைஞர்கள் பள்ளி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர் .மொபைல் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது மொபைல்களை எப்படி பயன்படுத்துவது மற்றும் தற்காத்துக் கொள்வது என்கின்ற விளக்கத்தை அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தார். இதன் மூலம் சைபர் பாதுகாப்பு காவல்துறைக்கு வழக்குகள் குறையும் என்றும், தனக்கு தெரியாமல் தனது மொபைலில் திருடக்கூடிய தகவல்களை தடுத்து பாதுகாப்புடன் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர். இதில்செந்தில் குமார் , பாலகிருஷ்ணன் , சுந்தரபாண்டியன் , ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
75
You must be logged in to post a comment.