48
இராமநாதபுரம், ஆக.16 – இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் கவன்ராஜ். 7. நேற்று இவர் படிக்கும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா முடித்து வீட்டிற்கு திரும்பினார். வழியில் வெறிநாய் கவன்ராஜின் இடது கையை கொடூரமாத கடித்து குதறி தள்ளியது. அப்பகுதி பொதுமக்கள் அந்த மாணவனை வெறிநாயிடமிருந்து மீட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதே போல், ஆக.9 ஆம் தேதி முதுகுளத்தூர் அரசு பள்ளி மாணவர் மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்தபோது வெறிநாய் கடித்து குதறியது. அவருக்கு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் தற்போது வெறி நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
You must be logged in to post a comment.