Home செய்திகள் வறட்சியை தாங்கி பயிர் வளர நெல்லுக்கு விதை கடினப்படுத்துதல் செய்தல் அவசியம்: வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை..

வறட்சியை தாங்கி பயிர் வளர நெல்லுக்கு விதை கடினப்படுத்துதல் செய்தல் அவசியம்: வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை..

by ஆசிரியர்
இராமநாதபுரம், ஆக.16 – 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் என்மனம்கொண்டான் ஊராட்சியில் வேளாண் துறை சார்பில் அட்மா கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிற்சி நடந்தது. திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் தலைமை வகித்து பேசியதாவது: நெல் சாகுபடியில் கோடை உழவு விதை தேர்வு விதைகளை நேர்த்தி செய்யும் முறைகளான உயிர் உர விதை நேர்த்தி முறைக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபேக்டீரியாவை கலந்து விதைப்பு செய்யலாம். விதை மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிவிரிடி கலந்து 24 மணி நேரத்திற்குள் விதைப்பு செய்யலாம். வறட்சியை தாங்கி பயிர் வளர நெல்லுக்கு விதை கடினப்படுத்துதல் செய்தல் அவசியம். இதற்கு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன் 300 கிராம் பொட்டாஸ் 30 லிட்டர் தண்ணீரில் கலந்து 14 -16 மணி நேரம் ஊறவைத்து பின், நிழலில் உலர்த்தி பழைய ஈரப்பதத்திற்கு கொண்டு வர வேண்டும். நெல்லில் நேரடி வரிசை விதைப்பு முறை தேவையாகும். நடப்பு ஆண்டு 2023 சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பதிலாக சிறுதானியங்களை மாற்றுப் பயிராக சாகுபடி செய்து விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் ஈட்டிடலாம். இவ்வாறு அவர் பேசினார். விதை நேர்த்தி தொடர்பாக உச்சிப்புளி  வேளாண் அலுவலர் கலைவாணி  செயல் விளக்கம் அளித்தார்.  உதவி வேளாண் அலுவலர் யோகலட்சுமி, சண்முகநாதன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!