கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி ‘முக்கிய அறிவிப்பு’ – வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக, பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி, வங்கி நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை கேட்டு மோசடி செய்வது தொடர்ந்து நடை பெற்று வந்தது. இதில் அப்பாவி வங்கி வாடிக்கையாளர்கள் பலர் இலட்ச ரூபாய்க்கும் மேல் ஏமாற்றப்பட்டு கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே இது சம்பந்தமான பதிவினை கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு ஏதேனும் உங்களுக்கு வந்தால் எந்த ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தமான தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு குறித்த பேனர் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

1 Comment

Comments are closed.