Home செய்திகள் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள் இன்று (பிப்.,17) விண்ணில் பாய்கிறது..

ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள் இன்று (பிப்.,17) விண்ணில் பாய்கிறது..

by Askar

இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.

இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.

ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!