இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -13
(கி.பி 750-1258)
பாக்தாத் நகரை தலைநகராக கொண்டு அப்பாஸிய பேரரசு செயல்பட்டாலும், சில பிரதேசங்களில் சிற்றரசுகள் தோன்ற ஆரம்பித்தன.
பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்த அப்பாஸிய மன்னர்களால் இயலவில்லை.
ஒரு சூழலில் சிற்றரசுகளை அங்கீகரித்து, அவர்களுக்கு பாராட்டுக்களும், பட்டங்களும், கொடுத்த கூத்துக்கள் எல்லாம் நடந்தது.
இருப்பினும் இதுபோன்ற சிற்றரசுகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே ஆட்சி செலுத்தியதால் இவைகள் அப்பாஸிய அரசாட்சியின் கீழே இருந்தன.
இதில் புவைஹி சிற்றரசு கி.பி 944முதல்1057 வரை சீராஜ் நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது.
அபுசுஜா புவைஹி என்பவர் பாரசீகத்தின் தைலமி என்ற மலைபிரதேசத்தில் தனது குடும்பத்துடன் குடியேறினார்.
அங்கு சமனைட் சிற்றசின் ஆட்சி நடைபெற்றது. அது சியாக்கொள்கை ஆதிக்கம் செலுத்தியது.
அவரின் மூன்று மகன்கள் அஹ்மது,அலி, ஹஸன் மிகுந்த வீரமும்,துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தனர்.
இவர்கள் சமனைட் சிற்றரசின் மன்னனை தோற்கடித்து அப்பகுதியை கைப்பற்றினர்.
பின்னர் அடுத்தடுத்து முன்னேறி இஸ்பஹான்,சீராஜ், கிரிமான் பகுதிகளை வென்றனர்.
பாக்தாத்திலிருந்த அப்பாஸிய கலீபா முஸ்தகமி மிகவும் வலுகுன்றி இருந்தார்.
இவர்கள் பாக்தாத் மீது படை எடுத்து அப்பாஸிய பேரரசின் துருக்கிய படைத்தளபதியை துறத்திவிட்டு நகரை இவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.
இதனை அங்கிகரித்த அப்பாஸிய மன்னர், அஹ்மதிற்கு “முகைஜுத் தௌலா” அலி அவர்களுக்கு “இமாமுத்தௌலா” ஹஸன் அவர்களுக்கு “ருக்னுத் தௌலா” என்ற பட்டங்களை வாரி வழங்கினார்.
அஹ்மது “அல்சுல்தான்” “அமீருல் உம்ரா” என்ற பட்டங்களையும் சூடிக் கொண்டார்.
குத்பா பிரசங்கத்தில் கலீபாக்களின் பெயர்களுக்குப்பிறகு அஹமதின் பெயரும் வாசிக்கப்பட்டது.
இவர்களின் பெயர்களில் நாணயங்களை வெளியிட்டனர்.
சியா கொள்கையின் தாக்கத்தால் முஹர்ரம் 10 ம்நாளை தேசியதுக்க தினமாக அறிவித்தனர்.
புவைஹிக்களின் கொள்கைகளை பிடிக்காமல் இவர்களின் ஆட்சியை அகற்ற அப்பாஸிய மன்னர் முயற்சித்தார்.
இதனை அறிந்த அஹ்மது அப்பாஸிய மன்னரின் கண்ணை குருடாக்கினார். அப்பாஸிய அடுத்த மன்னராக முஹத்ததீ என்பவரை நியமித்தனர்.
இறுதியில் அஹ்மது மரணமடைந்தார். அவரின் மகன் பக்தியார் புவைஹி அரசின் மன்னராக பதவி ஏற்றார்.
இவர் காஸ்பியன் கடல் முதல் பாரசீக வளைகுடா வரையிலும், இஸ்பஹான் முதல் சிரியாவரையிலும் பரந்த நிலப்பரப்புகளை கைப்பற்றினார்.
இவைகளை வேடிக்கைபார்த்துக் கொண்டு ஏற்றுக்கொண்ட அப்பாஸிய பேரரசர் அறிவித்த ஒரு அறிவிப்பு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.