Home செய்திகள் ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் ! கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி !! கமிஷ்னர் அமைதி !!!

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் ! கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி !! கமிஷ்னர் அமைதி !!!

by Baker BAker

ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் தலைமையில் நகராட்சி கமிஷனர் நஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 10 வது வார்டு திமுக கவுன்சிலர் காளீஸ்வரன் கூறுகையில் பாதாள சாக்கடையில் மேல்பகுதி மூடி இல்லாததால் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பாதாசாக்கடை கழிவுநீரை அகற்றச் சொல்லியும் மூடிகள் அமைக்க சொல்லியும் பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு அழைந்தும் எந்தவித பயனும் இல்லை என்ற கேள்வி எழுப்பினார். மேல்பகுதி மூடி இல்லாததால் இப்பொழுது செயல்படுத்த முடியாது என்று நகர்மன்ற தலைவர் பதில் அளித்தார் கமிஷனர் அமைதியாக வேடிக்கை பார்த்தார். வார்டுகளில் குப்பைகள் எடுப்பதற்கு பணியாளர்கள் முறையாக வருவதில்லை என்று சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர் அதற்கு நகராட்சி அதிகாரி தினமும் அனுப்புகிறோம் என்று பதில் அளித்தார்.எத்தனை பணியாளர்கள் அனுப்புகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 80க்கு மேற்பட்ட பணியாளர்கள் என்று கூறியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் எழுந்து அதிகாரிய நோக்கி எங்கள் வார்டில் நான்கு பணியாளர்கள் மட்டுமே வந்துள்ளார் என்றும் சில வார்டுகளில் பணியாளர்கள் குறைவாகவே வருகின்றனர் என்றும் பதில் அளித்தனர். வார்டு கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு நகராட்சி கமிஷனர் நஜிதா பர்வீன் எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதி காத்தார். கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்குள்ள பிரச்சனைகளை கூச்சல் குழப்பத்துடன் நகர் மன்ற தலைவரிடம் கூறினார். மேலும் வார்டுகளில் இருக்கக்கூடிய குறைகளை கூறினால் செய்து தருவதாக ஒவ்வொரு முறையும் கூறியும் இன்று வரை நடக்கவில்லை. எங்கள் வார்டுகளில் கழிவுநீர் பிரச்சனைகள் சாலை வசதிகள் குப்பை பிரச்சனைகள் கழிவுநீர் பிரச்சனை போன்றவற்றை கூறினாலும் நிவர்த்தி செய்யாமல் கூட்டத்தை கடந்து செல்வதாக கவுன்சிலர்கள் கூறினர். நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்றும் பல்வேறு பிரச்சனைகளை கூறியும் அடுத்த கூட்டத்திற்கு பார்ப்போம் என்று காலம் தாழ்த்துவதால் கவுன்சிலர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர் மேலும் பொதுமக்கள் குடிக்கின்ற குடிநீரில் கழிவு நீர் கலந்து சுகாதார கேடு ஏற்பட்டு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் கிணற்றிலும் இறங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றார்கள்.. கவுன்சிலரின் கோரிக்கைகளும் கவுன்சிலர்கள் கூறிய குறைகளையும் நகராட்சி கமிஷனர் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். சில கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசினாலும் எந்த பலன் இல்லை என்று உணர்ந்து டீயில் மிச்சரை போட்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஒரு மனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நகராட்சி கூட்டம் முடிந்தவுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து கையில் கழிவுநீர் கலந்த தண்ணீரை காண்பித்து முற்றுகையிட்டனர். அப்போது செய்தியாளரிடம் கூறிய பொதுமக்கள் எங்கள் வார்டில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர் இதில் சத்திரதெரு இந்திரா நகர், கிழக்கு தெரு, வாணி பட்டினம் ரோடு, பகுதிகளில் உள்ள பைப்புகளில் ஆறு மாதங்களுக்கு மேல் காவிரி கூட்டு குடிநீர் வருவதில்லை குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி துர்நாற்றம் வீசுவதாகும் தண்ணீர் பாட்டில்களுடன் பொதுமக்கள் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்பகுதியில் உள்ள தண்ணீர் கழிவு நீர் கலந்து வருகிறது கிணற்றில் கழிவு நீர் கலப்பதால் புழக்கத்திற்கு கூட பயன் அடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது இது பற்றி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் எந்த விதமான செயல்பாடும் இல்லாததால் வரும் திங்கட்கிழமைக்குள் சரி செய்யாவிட்டால் சென்னை ரோட்டில் அமர்ந்து மிகப் பெரிய மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com