5 ஆண்டுகளில் 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுகள், 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா மதுரை தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது..
அதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொறுப்பில் இருக்கும் போது மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை, மக்களின் கோரிக்கைகளை எவ்வளவு பூர்த்தி செய்திருக்கிறோம் என்பதை வைத்தே, நம்மை மக்கள் தீர்மானிக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோல் புத்தங்கம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
புத்தகம் எழுதுவது மட்டுமின்றி பேச்சிலும் சிறந்தவர் வெங்கடேசன். அந்த செயல்பாடுகளில் ‘அவருக்கு நிகர் அவர் தான் எங்களை போன்றவர்கள் எல்லாம் களப்பணிகளில் மட்டுமே ஈடுபடுவோம்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணி செய்வதில் மட்டும் கவனம் செலுத்தம் மார்க்சிஸ்ட் கட்சியினர் முன்பு, வெங்கடேசனின் ஐந்தாண்டு சாதனை குறித்த புத்தகம் வெளியிடப்பட நான், அதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்த கலைஞர் கருணாநிதி நான் திமுகவில் இல்லை என்றால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனாக இருந்திருப்பேன் என, சொல்லும் அளவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரின் உழைப்பு.
இன்னும் சில நாட்களில் தேர்தல் பணி துவங்க உள்ள நிலையில், கூட்டணி ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, இம்முறையும் தலைமை சொல்லும்படி செயல்படுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
புத்தகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பெற்று கொண்டார்
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் காமராஜ், மதுரை தெற்கு எம்எல்ஏ பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.