Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !

கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வேளாண்மைதுறை சார்பில் கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி மூன்றாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. பண்ணை பள்ளி பயிற்சிக்கு சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) விருதுநகர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதான் அவசியம் ,உழவியல் முறைகள் , கோடையில் ஆழமாக உழவு செய்வதால் , மண்ணிற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் நூற்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அவை சூரிய வெப்பத்தினாலும், பறவைகளால் கொத்தித்தின்றும் அளிக்கின்றது என்று விவரித்து பேசினார், மேலும் வரப்புகளில் பயறு வகைகள் வளர்த்து நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தீமை செய்யும் பூச்சிகளின் சேதத்தை குறைக்க வேண்டும் என்றும் பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பதால் பூச்சிக தாக்குதல் குறைவாக இருக்கும் என்றும் நெல் பயிரை அறுவடை செய்யும் போது தரை பரப்பை ஒட்டி அறுத்து பின்பு நீக்கிவிடவேண்டும் என்றும் வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படும் களைகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றும் பின்னர் நெற்பயிரில் உர மேலாண்மை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி ,வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com