Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1886 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16.02.2024 அன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” முகாமில் 1886 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “மக்களுடன் முதல்வர் முகாம் தென்காசி மாவட்டத்தில் 22.12.2023 முதல் 06.01.2024 வரை 7 கட்டங்களாக 55 முகாம்கள் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 3022 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களில் 3012 மனுக்கள் தீர்வு காணப்பட்டு இன்றைய தினம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நலனை மனதில் வைத்து செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விரைவாக எளிய முறையில் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் அரசின் அனைத்து திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 196 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 257 பயனாளிகளுக்கு உட்பிரிவு அல்லாத பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு நத்தம் அடங்கல் ஆணைகளையும், 24 பயனாளிகளுக்கு நத்தம் தனிப்பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு நத்தம் கூட்டுப்பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 49 பயனாளிகளுக்கு சாதிச் சான்றிதழ்களையும், 4 பயனாளிகளுக்கு பிறப்பிடச் சான்றிதழ்களையும், 10 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ்களையும், 14 பயனாளிகளுக்கு வாரிசுச் சான்றிதழ்களையும், 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்களையும், 1 பயனாளிக்கு முதல் பட்டதாரிச் சான்றினையும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 முதியோர் ஓய்வூதியத் தொகைகளையும், 7 பயனாளிகளுக்கு ரூ.1,00,800 விதவை உதவித் தொகைகளையும், 1 பயனாளிக்கு ரூ. 14,400 முதிர்கன்னி உதவித்தொகையும், தொழிலாளர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.43,200 முதியோர் உதவித் தொகைகளையும், 1 பயனாளிக்கு 12,000 கல்வி உதவித் தொகையையும் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

மேலும், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 12 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 42 பயனாளிகளுக்கு ரூ. 1,44,039,71 உதவிகளையும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.63,08,593 உதவிகளையும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனம் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ 16,84,770 உதவிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தாட்கோ கடனுதவியினையும், 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ 68,16,781 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 6 பயனாளிகளுக்கு ரூ.48,000 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.22,000 மதிப்பிலான திறன் பேசியினையும், 12 பயனாளிகளுக்கு ரூ 33,360, மதிப்பிலான காதொலி கருவிகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.31,600 மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், எரிசக்தித்துறை மூலம் 488 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றங்களும், 2 பயனாளிக்கு மின் அளவிட மாற்றங்களும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 451 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு (வீட்டுவரி பெயர் மாற்றம். நகராட்சி) பெயர் மாற்றங்களும், 145 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு (வீட்டு வரி பெயர் மாற்றம், பேரூராட்சி.) பெயர் மாற்றங்களும் என மொத்தம் 1886 பயனாளிகளுக்கு 3,00,77,475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல் காதர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சு.தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் கே.எல்.என்.சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி வட்டாட்சியர் பட்டமுத்து, செங்கோட்டை வட்டாட்சியர் மணிகண்டன், கடையநல்லூர் வட்டாட்சியர் சுடலைமணி, சங்கரன் கோவில் வட்டாட்சியர் பரமசிவன், சிவகிரி வட்டாட்சியர் ரவிக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, மாவட்ட மேலாளர் (மின்ஆளுமை) துர்கா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் அலுவலக பொது மேலாளர் ஹரிஹரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!