Home செய்திகள் ஆத்தூர், செம்பட்டி,சித்தையன் கோட்டை பகுதிகளில் அதிக சத்தத்துடன் வைக்கப்படும் ஒலிபெருக்கிகளால் பொதுமக்கள் அவதி..

ஆத்தூர், செம்பட்டி,சித்தையன் கோட்டை பகுதிகளில் அதிக சத்தத்துடன் வைக்கப்படும் ஒலிபெருக்கிகளால் பொதுமக்கள் அவதி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான ஆத்தூர், செம்பட்டி,சித்தையன் கோட்டை பகுதிகளில் விஷேசகாலங்களில் திருமண மண்டபங்களில் வைக்கப்படும் ஒலிபெருக்கிகளால் அவதி.

செம்பட்டி பகுதியில் திருமண மண்டபத்தின் அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்பு, காவலர் குடியிருப்பு, சிறுவியாபார ஸ்தாபனம் மற்றும் காவல்நிலையம். ஆத்தூர் திருமண மண்டபம் அருகில் பொதுமக்கள் குடியிருப்பு, பத்தரப் பதிவுத்துறை அலுவலகம், சிறுவியாபார கூடம் போன்றவை உள்ளன.

அதே போல் சித்தையன் கோட்டை திருமண மண்டபம் அருகே, பேருந்து நிலையம், சிறுவர்கள் பள்ளிக்கூடம், நூலகம், தொலைபேசி அலுவலம், வங்கி, பச்சிளம் குழந்தைகள் பாலூட்டி நிலையம்,மின்சார வாரியம் கிளை அலுவலம் மற்றும் சிறுவியாபாரிகள் தொழில் கூடங்கள் உள்ளது. இவை அனைத்தும் திருமண மண்டபங்களின் 50 மற்றும் 100 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ளது.

ஆனால், திருமண மண்டபத்தில் விஷேச காலங்களில் ஒலிபெருக்கி வைப்பவர்கள் இவைகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சத்தத்துடன் அந்த பகுதியையே அலர வைக்கிறார்கள்.  அதனால் பல நேரங்களில் விசேஷம் நடத்துபவர்களுடன் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதை மண்டப உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம மக்கள் ஒன்றிணைந்து வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பகுதி காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தகவல் தெரிவித்து அனுமதி பெற்றபிறகே நேரம் குறிப்பிடப்பட்டு ஒலிபெருக்கி வைக்கிறார்கள். அதேபோல் தனியார் நிகழ்ச்சிக்கும் அரசாங்க அதிகாரிகள் முறைப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கலைய வேண்டும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!