Home செய்திகள் யாருமற்ற அனாதையாய் வாழ்வின் கடைநிலையில் பல்வேறு கொடுமைகளை சந்திக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழக அரசு நீதி வழங்குமா?

யாருமற்ற அனாதையாய் வாழ்வின் கடைநிலையில் பல்வேறு கொடுமைகளை சந்திக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழக அரசு நீதி வழங்குமா?

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா செட்டியபட்டி பிரிவு என்னும் பகுதியில் ஓலைக்குடிசை ஒன்றில் சரோஜா என்னும் இரண்டு கால் மற்றும் இரண்டு கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளி வாழ்ந்து வருகிறார்.

உற்றார் உறவினர் யாருமின்றி அனாதையாய் வாழ்ந்து வரும் இவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை மட்டுமே. அதுவும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு வழங்க வேண்டிய 1500 ரூபாய் உதவித்தொகையை வழங்காமல் 1000 ரூபாய் மட்டுமே உதவித்தொகை பெற்று வருகிறார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுக்கும் உணவை மட்டுமே நம்பி வாழாமல் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையில் 400 ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிட்டு மீதமிருக்கும் 600 ரூபாயில் மளிகை சாமான்களை வாங்க அவரது இல்லத்திலிருந்து சின்னாளபட்டி என்னும் கிராமத்திற்கு மாதத்திற்கு ஒருமுறை ஆட்டோவில் சென்று குருணை அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி வருகிறார்.

இதில் கொடுமையான விஷயம் இந்த மளிகை சாமான்களை வாங்க ஆட்டோவிற்கு 100 ரூபாய்க்கு மேல் கொடுக்கிறார். இரண்டு கைகள் மற்றும் கால்கள் இல்லாமல் தவழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நடமாதுவதும் சாலையில் விழுந்து கிடக்கும் விறகுகளை பொருக்கி சமையல் செய்து வாழ்ந்துவரும் சரோஜாவிற்கு தமிழக அரசு கட்டாயம் உதவி செய்தே ஆக வேண்டும்.

இதில் மிகவும் கொடுமையான விஷயம் இவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் இவரை போன்ற பல மாற்றுத்திறனாளிகளை தான் பராமரிப்பதாகவும் தான் ஒரு ட்ரஸ்ட் வைத்து பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வெளிச்சம் ஏற்ப்படுத்த பாடுபடுவதாகவும் கூறி பலரிடமும் பணம் பெற்று வருவதாகவும் அவருடைய வீட்டில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை வைத்துக்கொண்டு அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அடித்து கொடுமைப் படுத்துவதாகவும் தன்னையும் வீட்டின் உரிமையாளர் அடித்து துன்புறுத்துவதாகவும் சரோஜா கூறுகிறார். தான் கொடுமைப்படுத்தும் விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்து கட்டிவிடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறுகிறார் சரோஜா.

எனவே, தமிழக அரசு உடனடியாக கடுமையான உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சரோஜாவிற்கு வசிப்பதற்கு வீடும், 1000 ரூபாய் உதவித்தொகைக்கு பதிலாக 1500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கிட வேண்டுமென்றும், சரோஜாவை கொடுமைப்படுத்தும் அனைவர் மீதும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 பிரிவு 92B ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அந்த வீட்டில் வசித்துவரும் மற்றொரு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண்ணையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் தமிழக அரசை TARATDAC திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!