Home செய்திகள்மாவட்ட செய்திகள் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு..

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு..

by Askar

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு..

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வழியாக செல்லும் திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு தீர்வு காணும் வகையில் குழித்துறையிலிருந்து பம்மம் வரை 2018 – ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்க்காக ரூ.222 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது வரை இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் மேற்பகுதியில் எந்த வித பராமரிப்பு பணிகளும் செய்யாமல் இருந்து வருவதால் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேற்பகுதியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு பாலத்தின் அடியில் உள்ள இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள பள்ளத்தை வாகன ஓட்டிகள் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அந்த இடத்தை சுற்றி பேரிகார்ட் அமைத்து தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் பாலம் உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களிடம் பாலம் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார், மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை முக்கிய அதிகாரிகளிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் போக்குவரத்து நெருக்கடியால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் விளக்கி பேசியதோடு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார், இதை அடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடமும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார், அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; நாம் தினமும் பயணித்துக் கொண்டிருக்கும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீரென பிளவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அழைத்து வந்து உடனடியாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம், சேதம் அடைந்திருப்பது சரியான பராமரிப்பு இன்றி காணப்பட்டதால் தான் சேதமடைந்துள்ளதாக அறிகிறோம். அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் , அதுவரை இந்த பாலம் வழியாக போக்குவரத்து செல்வதை தவிர்க்க வேண்டும், நான்கு ஆண்டுகள் முடிவடைந்த உடன் இந்த பாலத்தை மாநில அரசிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும், ஆனால் நான்கு வழி பாதை பணி நடப்பதால் இதுவரை ஒப்படைக்கவில்லை, மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கின்ற வரையில் இந்த பாலத்திற்கான பொறுப்பு தேசிய நெடுஞ்சாலை துறை தான், பொறுப்பேற்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் எந்த பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மாநில நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், தேசிய நெடுஞ்சாலைத்துறை , மாநில நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், கனக ரக கனிமவள வாகனங்கள் செல்வதால் இந்த பாலம் சேதமடைந்துள்ளதா எனக் செய்தியாளர்கள் கேட்டதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும், எல்லா வாகனங்களும் இந்த பாலம் வழியாகத்தான் இதுவரை சென்று கொண்டிருந்தது ,தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே உரிய காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் , நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரத்தினகுமார், குழித்துறை நகர தலைவர் வக்கீல் சுரேஷ், உண்ணாமலைகடை பேருராட்சி தலைவர் பமலா, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மாநில பேச்சாளர் சுஜின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!