Home செய்திகள் செங்கம் அருகே மழை வெள்ளத்தால் வீடுகள் சேதம்: அமைச்சர் ஆய்வு.

செங்கம் அருகே மழை வெள்ளத்தால் வீடுகள் சேதம்: அமைச்சர் ஆய்வு.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை கிராமங்களில்வெள்ளத்தால் வீடுகள் சேதம் சேதமடைந்த இதையொட்டி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஜவ்வாதுமலை மலை கிராமங்களில் பெய்த பலத்த மழையால் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள பட்டியந்தல், வீரளூர், மேல்சோழங்குப்பம், மட்டவெட்டு, கீழ்பாலூர், மேல்பாலூர் உள்ளிட்ட கிராமங்களில் மலையின் உச்சியிலிருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து, நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது.கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேல்சோழங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தண்ணீர் நிரம்பியதால், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கணினி, ஆவணங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியது.மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததை அடுத்து இப்பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கலசபாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பட்டியந்தல் கிராமத்தில் மழை வெள்ளத்தால் மூன்று வீடுகள் சேதம் அடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த மூன்று வீடுகளுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் சார்பில் தலா ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டது.அதேபோல் அதிமுகவின் சார்பில் சேதமடைந்த மூன்று வீடுகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் சேலை, வேட்டி உள்ளிட்ட துணிமணிகளும் வழங்கப்பட்டது.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!