சாலையில் கொட்டி உடைந்த முட்டைகள்– தயங்காமல் வெறும் கையில் சுத்தம் செய்த பெண் காவலர்-

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பு அருகே புதூரில் இருந்து தல்லாகுளம் நோக்கி விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றனர். எதிர்பாராதவிதமாக முன்னே சென்ற வாகனம் திடீர் பிரேக் அடித்து நிறுத்தியதால் ஓட்டுனர் ஆட்டோவை உடனடியாக நிறுத்த முயற்சி செய்தார் .இதனால் ஆட்டோவில் ஏற்றி சென்ற முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து சாலையில் பசை போல் ஓடியது ,, சாலையில் விழுந்து உடைந்த முட்டைகள் ஆட்டோ ஓட்டுனர் அப்புறப்படுத்தாமல் சென்றார்.

அதனால் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதை அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னலில் பணிக்கு வந்த போக்குவரத்து பெண் தலைமை காவலர் அதிர்ச்சியடைந்தார். பெரும் விபத்து நடக்கும் முன் தடுக்க வேண்டும் என்று பெண் தலைமை காவலர் மீனா சாலையில் உடைந்து கிடந்த முட்டை கழிவுகளை வெறும் கைகளால் நகற்றி கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் பெண் காவலரின் செயலை கண்டு அவரும் முட்டை கழிவுகளை அகற்ற உதவினார். இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைந்து செயல்பட்ட பெண் போக்குவரத்து தலைமை காவலர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி சென்றனர். இதனை அறிந்த மதுரை மாநகர ஆணையாளர் விசாரணை செய்து முட்டை விழுந்து உடைந்த பகுதியை உடனடியாக தண்ணீரை அடித்து சுத்தம் செய்ய உத்தரவிட்டார் . அதன்படி மாநகராட்சி வாகனம் தண்ணீரை அடித்து சுத்தம் செய்யப்பட்டது….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..