40
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 139 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மனைப் பட்டா கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணியாலை, தென்பள்ளிப்பட்டு, அலங்காரமங்கலம் , கெங்கநல்லூர், கச்சேரி மங்கலம் கடலாடி ,வில்வாரணி என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 139 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காப்பலூா் கூட்டுச் சாலை தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை வழங்கினாா்.நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் சாரதா, வருவாய் ஆய்வாளா்அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகெண்டனா்.
You must be logged in to post a comment.