இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரையில் SDPI அலுவலகம் திறப்பு…

SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கிளை அலுவலகத்தை SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அப்பாஸ் அலி ஆலிம், மாவட்ட பொதுச்செயலாளர் அஜ்மல் சரீப், மாவட்ட செயலாளர் செய்யது இபுராகிம், அஸ்கர் அலி, திருவாடானை தொகுதி தலைவர் நவாஸ் கான், பனைக்குளம் நகர் தலைவர் சேக் அலாவுதீன், ஆற்றங்கரை கிளை செயலாளர் நாசர் அலி இம்ரான், இஸ்மத், பதூர் ஜமான், சீனீ மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் ஆற்றங்கரை மமக தலைவர் நூருல் அப்பான் கலந்து கொண்டார்.