பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா…

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினத்தில் உள்ள சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 14-12-2017 அன்று நடைபெற்றது. இவ்விழாவை உதவி தொடக்க கல்வி அலுவலர் வாசுகி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தங்க கனிமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த உணவு திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் கை வண்ணங்களால் படைத்த உணவுகளை பள்ளி வளாகத்தில் அனைவரின் பார்வைக்கும் வைத்தனர்.

இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் ஊக்குவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தது. அதேபோல் இந்த நிகழ்வை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.