Home செய்திகள் சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் வகையில் யோகாசனம்; பள்ளி மாணவிகள் அசத்தல்..

சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் வகையில் யோகாசனம்; பள்ளி மாணவிகள் அசத்தல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரம் பகுதியில் இந்திய விஞ்ஞானிகளின் சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவிகள் யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இந்த வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையை நமது இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை போற்றும் இரவணசமுத்திரம் பகுதியில் பள்ளி மாணவிகளின் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரின் மகள்கள் குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தில் ஷாஜிதா ஜைனப் 5 ஆம் வகுப்பும், மிஸ்பா நூருல் ஹபிபா 12 ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இவ்விருவரும் உள்ளூரில் வைத்து நிலவில் லேண்டர் தரையிறங்கும் காட்சி போல் இந்திய வரைபடத்துடன் வடிவமைத்து கைகளில் தேசிய கொடி ஏந்தி பல்வேறு யோகாசனம் மூலம் சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும், திறமையாலும் உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளதை போற்றும் வகையில் இந்த நிகழ்வில் ஈடுப்பட்டனர். இதில் யோகா ஆசிரியர் குற்றாலம் குரு கண்ணன், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த சகோதரிகள் யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றும், யோகா, ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!