Home செய்திகள் பூலித்தேவன் 308 வது பிறந்த நாள் விழா; தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..

பூலித்தேவன் 308 வது பிறந்த நாள் விழா; தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..

by ஆசிரியர்

இந்திய விடுதலைக்காக வெள்ளையனை எதிர்த்து முதன் முதலில் போரிட்ட மாமன்னர் பூலித்தேவன் 308 வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனைவர் சிவ. ஆனந்த் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடா்ந்து மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி பேசுகையில், உலகமே எதிர்நோக்கிய கழக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றமைக்கு மாநாடு ஏற்பாடு செய்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அதற்காக உழைத்த தலைமை கழக நிர்வாகிகள் முதல் வீறுகொண்டு எழுந்து வந்து கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவருக்கும் நன்றி கூறினார். கழக எழுச்சி மாநாடு அன்று மறைந்த குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். அடுத்ததாக சந்திராயன் 3 விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் நெற்கட்டும் செவலில் உள்ள மாமன்னர் பூலித்தேவன் அரண்மனையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்திட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கினங்க தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் வருகை தர உள்ளனர். கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். அதோடு அனைவரும் தங்களுடைய சொந்த வாகனங்களில் அனுமதி சீட்டு பெற்று தான் செல்ல வேண்டும் காவல் துறை அறிவித்துள்ளனர். எனவே அனைவரும் விதிமுறைகளை பின்பற்றி இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போற்றி புகழ்வோம் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில்  மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், பொருளாளர் ஆத்மாநாதன் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் துரைப் பாண்டியன், வல்லம் எஸ்.ஆர் ராமசந்திரன், ஆய்க்குடி கே.செல்லப்பன், செல்வராஜ், ஜெயகுமார் மகாராஜன், அதிமுக நகர செயலாளா்கள் எம்.கே முருகன், ஆறுமுகம், பரமேஸ்வர பாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், சேவக பாண்டியன், முத்துகுட்டி, கார்த்திக் ரவி, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், சங்கரன் கோவில் நகர அம்மா பேரவை செயலாளர், செளந்தர்(எ) ஷாகுல் ஹமீது, உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கர சுப்பிரமணியன், சத்யகலா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஞானராஜ், ஒன்றிய நிர்வாகிகள் இடைகால் செல்லப்பா, முத்து வேல்சாமி, செந்தில் குமார், ராஜ்குமார், குருசேவ், டாக்டர் திலீபன் சந்திரன், கழக பேச்சாளா் தீக்கனல் லெட்சுமணன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளா் சண்முகையா அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!